Breaking News

மாசாணியம்மன் கோயில் கே எம் ஜி கல்வி குழுமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்


 ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் சுதந்திர தின விழா நடைபெற்றது. அறங்காவலர் குழுத்தலைவர் முரளிகிருஷ்ணன் தேசியக்கொடியேற்றினார். கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் எம்பி ஈஸ்வரசாமி, அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து, ஆனைமலை பேரூராட்சித்தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார், திமுக நகரச்செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
காளியாபுரம் பழனியம்மாள் கே.எம்.ஜி., பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாசாணியம்மன் கோயில் தலைவர் முரளிகிருஷ்ணன், பள்ளித்தாளாளர் சிவக்குமார், தலைமை ஆசிரியர் சேதுராமன் நிர்வாகிகள் ஸ்ரீவட்சன், சிவராமகிருஷ்ணன், ரமேஷ்குமார், சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments