Breaking News

வனப்பகுதிகள் அத்துமீறி நுழைந்த 12 நபர்களுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம்


வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 12 நபர்களுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வனக்கோட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலைப்பேட்டை வனச்சரகத்தில் கடந்த சில தினங்களாக கள்ளச்சாராய பிரச்சனை தொடர்ந்து வருவதால் காட்டுப்பட்டி, மாவடப்பு, குழிப்பட்டி மற்றும் குருமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தொடர் ரோந்து பணி மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகள் வனத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து நேற்று 24ம் தேதி சனிக்கிழமையன்று சென்னையை சார்ந்த நான்கு நபர்கள் உடுமலைப்பேட்டை தனது நண்பரின் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்துவிட்டு, சுற்றிப்பார்க்கும் நோக்கில் திருமூர்த்திநகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த நாகமாணிக்கம் மூலமாக 24ம்தேதியில் மாவடப்பு மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த குமார் என்பவருடன் எவ்வித முறையான முன் அனுமதியின்றி மாவடப்பு மலைவாழ் மக்கள் கிராமத்தை சுற்றிப்பார்க்கும் நோக்கில் குமார் வீட்டில் தங்க வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்படி ஏழு நபர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வரப்பட்டது..
1.மகேஷ்வரன்(37)சென்னை,
2. விஜயகுமார்(36) சென்னை,
3. வரதராஜ்(35) சென்னை,
4. மாதேஷ்வரன்(37) சென்னை,
5. சுதாகர்(42), இலங்கை அகதிகள் முகாம், திருமூர்த்திநகர்,
6. வோல்டர்(43), இலங்கை அகதிகள் முகாம் திருமூர்த்திநகர்,
7. நாகமாணிக்கம்(28), இலங்கை அகதிகள் முகாம், திருமூர்த்திநகர்..
 *வனக்குற்ற எண் 11/2024* வழக்கு பதிவு செய்து 
ஏழு நபர்களுக்கு தல 20.000 வீதம் 140,000 ரூபாய் இணக்க கட்டணம் விதிக்கப்பட்டது .
மேலும் அன்றைய தினமே 24.08.2024ம் தேதியில் வனஎல்லைப்பகுதியை ஒட்டியுள்ள எரிசினம்பட்டி, தேவனூர்புதூர், இராவணாபுரம் மற்றும் ஆண்டியூர் பகுதியைச் சார்ந்த 5 நபர்கள் வனத்துறையின் முன் அனுமதியில்லாமல் வனப்பகுதிக்குள் நுழைந்து காட்டுப்பட்டியை சார்ந்த மாரிமுத்து என்பவர் மூலமாக மாடுகள் வாங்குவதற்கு மாவடப்பு செட்டில்மெண்ட் சென்றுள்ளனர். மேற்படி நபர்களை தீவிர ரோந்து பணி மூலமாக பிடித்து விசாரணை செய்தும், வனத்துறையின் எவ்வித முன் அனுமதியிமின்றி அத்துமீறி அரசு காப்புக்காட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்காக உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் *பலஇன வனக்குற்றங்கள் (MISC No 10/2024*  பதிவு செய்யப்பட்டு தல ஒரு நபருக்கு 20.000வீதம் ஐந்து நபருக்கு 1.00000 இணக்ககட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவங்கள் குறித்து உடுமலைப்பேட்டை வனச்சரகத்திற்குட்பட்ட
செட்டில்மெண்ட் பகுதிகளான குழிப்பட்டி, குருமலை, காட்டுப்பட்டி மற்றும் மாவடப்பு செட்டில்மெண்ட் மக்களுக்கு வனத்துறையின் முன் அனுமதியில்லாமல் வெளிநபர்களை அழைத்துச்செல்லக் கூடாது எனவும், அவ்வாறு வெளிநபர்களை வனப்பகுதிக்குள் அழைத்துச்சென்றால் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலர் மணிகண்டன் கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
1. ப.ஆறுச்சாமி (39) இராவணாபுரம், 2. கார்த்திக்ராஜா (33) இராவணாபுரம்,
3. பிரகாஷ் (27)இராவணாபுரம்,
4. நித்தியானந்தம் (41) தேவனூர்புதூர்
5. மாணிக்கவாசகம்(52) தேவனூர்புதூர்.
விளம்பரம்.... மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சியில் சேர அட்மிஷன் நடைபெற்று வருகிறது. டிகிரி முடித்தவர்கள் ஆறு மாத டிப்ளமோ, 12-ம் வகுப்பு,, பத்தாம் வகுப்பு படித்தவர்கள் ஒரு ஆண்டு டிப்ளமோ சேரலாம்.
தொடர்புக்கு.. 8667880207 போன் அல்லது வாட்ஸ் அப் செய்யலாம்.

No comments