Breaking News

ராமலிங்கர் பணிமன்றம் சார்பில் மண்டல அளவிலான கலை இலக்கிய போட்டிகள்!

ராமலிங்கர் பணி மன்றம் மற்றும் டாக்டர் என் ஜி பி கலை அறிவியல் கல்லூரி இணைந்து மண்டல அளவிலான கலை இலக்கியப் போட்டிகளை நடத்தியது. அருட்செல்வர் டாக்டர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் ஆன்மீக இலக்கிய பெரும் பணியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ராமலிங்கர் பணி மன்றம் சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு ராமலிங்கர் பணிமன்றம், கோவை டாக்டர் என் ஜி பி கலை அறிவியல் கல்லூரி இணைந்து கோவை, நீலகிரி, வால்பாறை, திருப்பூர், ஈரோடு மண்டல அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் நடந்தின. மாவட்டங்களில் இருந்து 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக 5000 ரூபாயும், 2ம் பரிசாக 3000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 2000 ரூபாயும் மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டன. போட்டிகளை டாக்டர் என் ஜி பி கல்வி குழுமங்களில் முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், கல்வி நிறுவனங்களின் கல்வி புல இயக்குனர் முத்துராமசாமி தொடக்கி வைத்தனர். நிறைவு விழாவில் சக்தி குழுமங்களின் தலைவர் ம.மாணிக்கம், டாக்டர் என் ஜி பி கல்விக் குழுமங்களில் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிச்சாமி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
 போட்டிகளில் கல்லூரி துணை முதல்வர் சரவணன், தமிழ் துறை தலைவர் குப்புசாமி, பேச்சாளர்கள் சுடர்விழி, தனமணி,  வெங்கட், கவிஞர் உமா மகேஸ்வரி, விஜயஜெயா, சுஜாதா கல்லூரி தமிழ் துறை பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.

No comments