வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் விளையாட்டு தினம்
பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் 17 ஆவது ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. விழாவை, வால்பாறை காவல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி துவக்கி வைத்தார். விளையாட்டு மன்ற துணைத் தலைவர் ஜெரோஷா வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. விளையாட்டு மற்றும் விளையாட்டு கழகத்தின் துணை தலைவர் சண்முகராஜன் நன்றி கூறினார். கல்லூரி முதல்வர் முனைவர் பிரபாகர், இயக்குனர் கெம்புச்செட்டி துணை முதல்வர் சிவசாமி,துறை தலைவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். விழாவை கல்லூரி ஆலோசகர் ரவிக்குமார் மற்றும் துணை உடற்கல்வி இயக்குனர் சரண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
No comments