கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கம்!! நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?
கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கம்
ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கல்குவாரிகளில் இருந்து கேரளாவிற்கு செமனாம்பதி, கோவிந்தாபுரம், நடுப்புணி, கோபாலபுரம், மீனாட்சிபுரம் வழியாக தினசரி அதிக கனரக வாகனங்கள் கனிம வளங்களை கொண்டு செல்கிறது.
மேலும் கிராமப்புறங்களில் வழியாக செல்வதால் சாலைகள் முற்றிலும் பழுதடைந்துள்ளது. பொதுமக்கள் சாலைகளை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
அதிவேகமாக போட்டி போட்டுக் கொண்டு கனரக வாகனங்கள் செல்லும் பொழுது வேகத்தடையில் ஏறி இறங்கும்போது கற்கள் கீழே விழுந்து விடுவதால் விபத்தும் ஏற்படும் நிலை உள்ளது.
டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லும் கனிம வளங்கள் முறையாக தார்ப்பாய் போட்டு மூடாததால் தூசிகள் கற்கள் லாரிகளுக்கு பின்னே செல்லும் வாகன ஓட்டிகளை பாதிக்கிறது. இது தடுக்கும் விதமாக ஆனைமலை காவல் நிலைய போலீசார்,பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரிகள்,கனிமவள அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி வாகனங்கள் மீது நடவடிக்கை என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments