வால்பாறையில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்
வால்பாறையில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்
தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வயநாட்டில் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை பகுதியிலும் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இதனால், வால்பாறையில் வெள்ளிக்கிழமை பேரிடர் மீட்பு குழுவினர் வருகை புரிந்துள்ளனர். மேலும், ஏதாவது இயற்கை சீற்றங்களால் பாதிப்புகள் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
No comments