Breaking News

ஆடிமாத ஆன்மீகப்பயணத்தில் மாசாணியம்மன் கோயிலில் தரிசனம்


ஆடிமாத ஆன்மீகப்பயணத்தில் மாசாணியம்மன் கோயிலில் தரிசனம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடிமாத ஆன்மீகப்பயணத்தில் மாசாணியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

 இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்கள் ஆன்மீகப்பயணம் என்ற திட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் வெள்ளிக்கிழமை ஆனைமலை
மாசாணியம்மன் கோயிலில் தரிசனம் செய்யவந்தனர்.

அந்த குழுவினருக்கு மாசாணியம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் முரளிகிருஷ்ணன், கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ், கோயில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் திருமுருகன்,
மஞ்சுளாதேவி,மருதமுத்து, கோயில் கண்காணிப்பாளர் புவனேஷ்வரி மற்றும் பல்வேறு கோயில்களின் செயல் அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர்.

----- 

No comments