ஆடி 18 தரிசனத்திற்காக மாசாணியம்மன் கோயிலில் முன்னேற்பாடு பணிகள்
ஆடி 18 தரிசனத்திற்காக மாசாணியம்மன் கோயிலில் முன்னேற்பாடு பணிகள்
மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்காக வந்து செல்வது வழக்கம்.
விசேஷ நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந் நிலையில் சனிக்கிழமை ஆடி 18ம் நாள் என்பதால் அதிக அளவில் பக்தர்கள் கோயிலுக்கு வர வாய்ப்புள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பு கருதியும்,கோயிலுக்கு வரும் அனைவரும் உரிய முறையில் அம்மனை தரிசித்துச் செல்லும் விதமாகவும் , தடுப்புகள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை மாசாணி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் வழக்கத்தை விட கூடுதலாக போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பணிகளை மாசாணியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், உதவி ஆணையர், அறங்காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
No comments