விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆப்சென்ட்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆப்சென்ட்
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
சார் -ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமை வகித்தார்.
இதில் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆனைமலை ஒன்றிய பகுதி மற்றும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பகுதிகள் குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அந்த கேள்விக்கு பதில் கூற ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரவில்லை.
இதனால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் இதுபோல் செயல்படுவதால் நாங்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்து குறைகளை கூறி பயனில்லை என தெரிவித்தனர்.
No comments