Breaking News

ஆடி அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம்


ஆடி அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம்
பொள்ளாச்சி, ஆக.4-
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை முதலே வரிசையில் காத்து நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு  உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்துசெல்வது வழக்கம். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை என்பதால் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்துசென்றனர். சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் முரளி கிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து, கண்காணிப்பாளர் புவனேஷ்வரி ஆகியோர் கண்காணித்தனர்.

---

No comments