முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தின் சார்பில் 78 வது சுதந்திர தின விழா
முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தின் சார்பில் 78 வது சுதந்திர தின விழா
உடுமலை முன்னாள் ராணுவ வீரர்கள்நல சங்கத்தின் சார்பில் நல சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா நேதாஜி மைதானத்தில் கொண்டாடப்பட்டது
முன்னாள் ராணுவ நல சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக அரிமா சங்க அறக்கட்டளை சேர்மன் நீலகண்டன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். முன்னதாக நாயப் சுபேதார் நடராஜ் தலைமையில் சுரேஷ் பிரகாஷ் , ஆகியோர் அணிவகுப்பு நடத்தினர் மநிகழ்ச்சியில் நேதாஜி நடைப்பயிற்சி நிர்வாகிகள் விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் குழந்தைகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் உடுமலை மடத்துக்குளம் பகுதிகளை சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசு வழங்கப்பட்டது. ஓவியர்கனி மொழி 78 சுதந்திர வீரர்களின் உருவப்படங்களை வரைந்து காட்சிப்படுத்தினார். மேலும் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகம் ருத்ரப்பா நகர் ருத்ரப்பா நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி உடுமலை ஸ்டேட் பாங்க் உடுமலை கிளை நூலகம் எண் 2 ஆகிய இடங்களில் முன்னாள் ராணுவ நல சங்கத்தின் சார்பில் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கின ர் இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க செயலாளர் சக்தி பொருளாளர் சிவகுமார் மற்றும் நாயப்சுபேதார் நடராஜ் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் தொழிலாளர் கலந்து கொண்டனர். உடுமலை கிளை நூலகம் எண் 2 ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ நலச் சங்க தலைவர் ராமலிங்கம் தேசிய கொடி ஏற்றி வைத்தார் நூலகர் மகேந்திரன் மகளிர் நூலகவாசகர் வட்டதலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி. வாசகர் வட்ட உறுப்பினர் ராமதாஸ் நூலகர் பிரமோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments