அன்னூரில் பிக்கப் வாகனத்தில் கடத்தி வந்த 400 கிலோ குட்கா பறிமுதல்
அன்னூரில் பிக்கப் வாகனத்தில் விற்பனைக்காக கடத்தி வந்த 400 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை போலீசார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
அன்னூர் தர்மர் கோயில் வீதியில் இன்று அதிகாலை நெடுஞ்சாலை ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த பொலிரோ பிக்-அப் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் கால்நடைகளுக்கு பயன்படுத்தும் தவிடு மூட்டைகள் இருந்துள்ளது. இருப்பினும் போலீசார் அந்த மூட்டைகளை அகற்றி சோதனை செய்த போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அடங்கிய மூட்டைகள்இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தில் வந்த
இரும்பறை, மீனம்பாளையம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் பார்த்திபன்(35), துடியலூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் என்பவரது மகன் பாலசுப்பிரமணியம் (28) ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து உதவி ஆய்வாளர் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் போலீசார் அவர்களை விசாரித்ததில் குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் பொலிரோ பிக்-அப் வாகனத்தில் கொண்டு வந்த 400 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் பொலிரோ பிக்-அப் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments