மடத்துக்குளம் அருகே சார்பதிவாளரை கண்டித்து 150-க்கு மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை
மடத்துக்குளம் அருகே சார்பதிவாளரை கண்டித்து 150-க்கு மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சார்பதிவாளர் தாமோதரன் தனக்கு வேண்டிய புரோக்கர்களை வைத்து பத்திரப்பதிவுக்கு வரும் விவசாயிகளையும், வீட்டு மனை பதிவுக்கு வரும் பொது மக்களையும் மிரட்டி,
லஞ்சம் பெறுகிறார். பத்திரபதிவுகளுக்கு முறைகேடு செய்கிறார் என புகார் எழுந்தது.
இவர் மீது துறை ரீதியா நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகளும் பொதுமக்களும் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட பதிவாளர் மண்டல பதிவாளர் மற்றும் தமிழக அரசும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், திங்கள்கிழமை தாமோதரன் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.. அப்போது காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.
No comments