Breaking News

உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு




உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் வெள்ளபெருக்கு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில்  திங்கள்கிழமை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் ஆர்பரித்து கொட்டியது.
இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடிவார பகுதியிலுள்ள அமனிலிங்கேஸ்வரர் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது.
காலை முதலே பாதுகாப்பு கருதி பக்தர்களும் சுற்றுலாபயனிகளும் அனுமதிக்கபடாத நிலையில் அசம்பாவிதங்கள் தவிர்க்கபட்டது.
தொடர்ந்து தடுப்பு அமைத்து கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

No comments