அதிக கனிம வளங்கள் ஏற்றி சென்ற லாரிகளுக்கு 13 லட்சம் அபராதம்
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இப்படி கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் கனிம வளங்களை ஏற்றி செல்வதாகவும், அதிவேகத்தில் இயக்கி பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் தொடர் புகார் இருந்து வருகிறது.
மேலும் கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் லாரி ஓட்டுனர்களுக்குள் சமீபத்தில் செமனாம்பதி பகுதியில் மோதல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதை அடுத்து இடையூறு செய்த லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் அந்த பிரச்சனை செய்த லாரிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் உள்ளது.
இந்நிலையில் கோவை போக்குவரத்து இணை ஆணையர் சிவக்குமாரன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி வட்டாரப் போக்குவலத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் மற்றும் செமனாம்பதி, கோபாலபுரம் சோதனை சாவடி ஆய்வாளர்கள் கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளை சோதனை செய்தனர். அதில் 20 லாரிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிம வளங்களை ஏற்றி சென்றதாக 13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் பத்து லாரிகள் பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு பறிமுதல் செய்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த லாரிகளுக்கு ரூ 11,000 வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் கூறுகையில்..
தொடர்ந்து கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் கண்காணிக்கப்படும். விதிமுறைகளை மீறும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments