Breaking News

கோழிப்பண்ணை சுவர் சரிந்து ஒரு பெண் உயிரிழப்பு நான்கு பேர் காயம்

கோழிப்பண்ணை சுவர் சரிந்து ஒரு பெண் உயிரிழப்பு நான்கு பேர் காயம் 

 பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியில் கோழிப்பண்ணை சுவர் சரிந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்தார், 4 பேர் காயம் அடைந்தனர்.

 பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியில் கோழிப்பண்ணை மற்றும் தென்னைநார் தொழிற்சாலை நடத்தி வருபவர் முருகானந்தம் என்கிற ஆனந்த். கோழிப்பண்ணை தற்போது செயல்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.

 இன்று பெய்த மழைக்காக முருகானந்தம் மற்றும் அவரது மனைவி மற்றும் பணியாளர்கள் கோழிப்பண்ணை சுவர் அருகே நின்றதாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக கோழிப்பண்ணையின் சுவர் தொடர் மழையால் இடிந்து விழுந்து உள்ளது. இதனால்,  முருகானந்தம், அவரது மனைவி உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். இதில் ஒரு பெண் உயிரிழந்தார்.

 கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments