Breaking News

மழைக்காலத்தில் உடல் நல பாதிப்புகள் வராமல் எப்படி தடுப்பது? "மரு .இராஜா , குழந்தைகள் நல மருத்துவர்,

"மழைக்காலத்தில்  உடல் நல பாதிப்புகள் வராமல் எப்படி தடுப்பது? "

மரு .இராஜா , குழந்தைகள் நல மருத்துவர்,மருத்துவமனை கண்காணிப்பாளர் ,
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ,
பொள்ளாச்சி, கோவை மாவட்டம்.
      இந்திய தேசிய சுகாதார மையம் மழைக்காலத்தில் எந்த சுகாதார வழிமுறைகளை நாம் கையாள வேண்டும் ? எப்படி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்கள். 

1. சுத்தமான தண்ணீர் பருக வேண்டும் - தண்ணீரை காய்ச்சி வடிகட்டி பருக வேண்டும் ஏனென்றால் மழைகாலத்தில் தண்ணீர் மூலம் அதிகமான நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது . வயிற்றுப்போக்கு , காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் தண்ணீர் மூலம் மழைக்காலத்தில் பரவும் வாய்ப்பு உள்ளது. 
2. ⁠ உண்ணும் காய்கறி மற்றும் பழங்களைதண்ணீரில் கழுவி சுத்தமாக உண்ண வேண்டும் . 
3. ⁠ வெளியே சென்று வீட்டுக்கு வந்தவுடன் கை ,கால்களை சோப்பு போட்டு கழுவுவது நோய்கள் தடுக்க உதவும்.
4. ⁠ வீட்டை சுத்தி மழை நீர் பூத் தொட்டி, டயர் , தேங்காய் மூடியில் தேங்கி இருந்தால் அதை வடித்து விட வேண்டும். இதன் மூலம் பகல் நேரத்தில் உற்பத்தியாகும் (ஏடிஸ் )டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்த முடியும். 
5. ⁠ உடற்பயிற்சி :மழை நேரத்தில் வீட்டிற்க்கு வெளியே உடற்பயிற்சி செய்ய செல்லாமல் வீட்டுக்கு உள்ளே உடற்பயிற்சி செய்தால் நல்லது.
6. மழையில் அடிக்கடி நனையாமல் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது அதற்காக தேவைப்படும் கொடை ரெயின் கோட் முதலியவை வெளியே செல்லும்போது எடுத்துச் சென்றால் நலம். 
7. ⁠ உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறிகள் ,பழங்கள் ,புரதசத்து அதிகமாக உள்ள சுண்டல் ,முட்டை முதலியவற்றை உண்ண வேண்டும். 
8. ⁠ சுத்தமில்லாத உணவுகளை உண்ணாமல் தவிர்ப்பது நல்லது. 
9. ⁠ தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது உடலுக்கும், மனதிற்கும் நல்லது.
10. ⁠ காய்ச்சல் , அதிக உடல் சோர்வு ஏற்பட்டால் மருத்துவரை மருத்துவமனையில் சந்தித்து தேவையான மருந்து மாத்திரைகளை ஆரம்ப கட்டத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.

No comments