Breaking News

பொள்ளாச்சி அருகே கோழிப்பண்ணை சுவர் சரிந்து இருவர் உயிரிழப்பு


பொள்ளாச்சி அருகே கோழிப்பண்ணை சுவர் சரிந்து இருவர் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே கோழிப்பண்ணை சுவர் சரிந்து இருவர் உயிரிழந்தனர். நான்குபேர் காயமடைந்தனர்.

 பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம்(45), இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை மற்றும் தென்னைநார் கட்டி தயாரிக்கும் தொழிற்ச்சாலை நடத்திவந்துள்ளார். 

கோழிப்பண்ணை பழுது ஏற்பட்டதால் தற்காலிகமாக செயல்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை கோழிப்பண்ணையை புனரமைக்க ஓட்டுக்கூரைகளை அகற்றும் பணியில் முருகானந்தம் அவரது மனைவி ரேவதி மற்றும் மூன்று வடமாநிலத்தொழிலர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது, எதிர்பாராத விதமாக கோழிப்பண்ணையின் ஹாலோபிளாக் கல் சுவர் சரிந்து விழுந்துள்ளது. இதில் கொல்த்தாவைச்சேர்ந்த கோபால்சிங் என்பவரின் மனைவி மொமதாசிங்(30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பலத்த காயமடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த முருகானந்தம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ரேவதி, கொல்கத்தாவைச்சேர்ந்த ரபிந்திரசிங்(40), கொனாமிகா சிங்(20) ஆகிய மூவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். கோட்டூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

----

No comments