மாசாணி அம்மன் கோயிலில் பாலாலயம்
மாசாணியம்மன் கோயிலில் பாலாலயம்
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாலாலய நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள்.
கோயில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக செய்வதற்காக விமானம் மற்றும் இராஜகோபுர திருப்பணிகள் செய்வதற்கு பாலாலயம் நிகழ்ச்சி புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்வில், எம்.பி. ஈஸ்வரசாமி, எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர், அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து, பேரூராட்சித் தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார்,டிஎஸ்பி, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, அதிமுக நிர்வாகி கார்த்திக் அப்புசாமி, சுந்தரம், திமுக நிர்வாகிகள் தேவசேனாதிபதி, எஸ்.நல்லூர் யுவராஜ், யுவராஜ், மருத்துவர் செந்தில்குமார், அதிமுக நிர்வாகி ராஜேந்திரன், கோயில் முறைதாரர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments