Breaking News

மாசாணியம்மன் கோயில் பாலாலயம்


மாசாணியம்மன் கோயில் பாலாலயம்

 ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாலாலய நிகழ்வு வரும் 10ம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

 ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள். 

இந்த கோயில் கும்பாபிஷேக நிகழ்வு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக செய்வதற்காக விமானம் மற்றும் இராஜகோபுர திருப்பணிகள் செய்வதற்காக பாலாலயம் நிகழ்ச்சி வரும் 10ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
---

No comments