Breaking News

பொள்ளாச்சியில் விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி சீல்


பொள்ளாச்சியில் விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி சீல்

170க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
 பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கடைகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி இன்று நகராட்சி அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்போடு சீல் வைத்தனர்.

 பொள்ளாச்சி மகாலிங்கபுரம் குடியிருப்பு பகுதியில் வாகன நிறுத்தும் இடம் இல்லாதது, குடியிருப்பு பகுதிகளை கடைகளாக மாற்றியது போன்ற விதிமுறைகளை மீறி 60க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுவதாகவும், இவைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொள்ளாச்சியை சேர்ந்த தனிநபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இந்நிலையில், உயர்நீதிமன்றம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள 26 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டது.

 உத்தரவை அடுத்து இன்று காலை நகராட்சி அதிகாரிகள் மகாலிங்கபுரம் பகுதிக்கு சீல் வைப்பதற்காக வந்தனர். அப்போது, அங்கு கடை வியாபாரிகளுக்கு ஆதரவாக வியாபாரிகள் சங்கம் மற்றும் பல்வேறு இடங்களில் கடைகள் வைத்திருப்பவர்கள் ஒன்று திரண்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

 நான்கு டிஎஸ்பிக்கள் தலைமையில் 170 போலீசார் குவிக்கப்பட்டனர்.

 இதை அடுத்து போலீசார், நகராட்சி அதிகாரிகள், வியாபாரிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக பேச்சு நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை

 இதை அடுத்து போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் பணியை துவங்கினர். அப்போது, வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 கடைகளை சீல் வைக்க ஒத்துழைப்பு வழங்காததால் கடைகளுக்குள் இருந்தவர்களை போலீசார் குண்டுகட்டாக இழுத்து வெளியேற்றினர்.

 அதற்குப் பிறகு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை அதிகாரிகள் நடந்து சென்று கடைகளுக்கு சீல் வைத்தனர். உடன் நூற்றுக்கும் அதிகமான போலீசார் சென்றதால் பொள்ளாச்சி பரபரப்பானது. ஒன்பது கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மாலை 3 மணிக்கு பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை அலுவலகத்திலல் வியாபாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.



No comments