Breaking News

ஆழியாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


ஆழியாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பொள்ளாச்சி, ஜூலை.20-
ஆழியாறு அணை சனிக்கிழமை மாலை 3 மணிக்கு 110 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 பிஏபி திட்டத்தில் முக்கிய அணைகளில் ஒன்றாக இருப்பது ஆழியாறு அணை. இந்த அணையிலிருந்து பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர, கேரளாவிற்கு 7.25 டிஎம்சி தண்ணீரும் ஆழியாறு அணையில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு பிஏபி திட்ட தொகுப்பு அணைப்பகுதிகளில் போதிய மழை பெய்யாதாதல் தொகுப்பு அணைகள் நிரம்பவில்லை. இந்த ஆண்டு கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பிஏபி திட்ட தொகுப்பு அணை பகுதிகளுக்கு நல்ல நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 

 வியாழக்கிழமை இரவு சோலையாறு நிரம்பிவிட்டது. இந்நிலையில், ஆழியாறு அணை மொத்தமுள்ள 120 அடி உயரத்தில் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு 110 அடியை எட்டியது. 

இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரோயோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆழியாறு அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் ஆற்றில் குளிக்கவோ, துணை துவைக்கவோ, தேவையில்லாமல் ஆற்றில் இறங்கவோ கூடாது.

No comments