இரு மாநில போலீசார் இணைந்து வாகன சோதனை மீனாட்சிபுரம் பகுதியில் பரபரப்பு
இரு மாநில போலீசார் இணைந்து வாகன சோதனை
மீனாட்சிபுரம் பகுதியில் பரபரப்பு
தமிழக கேரள எல்லையான மீனாட்சிபுரம் பகுதியில் உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி ஆனைமலை போலீஸ் சார் மற்றும் கேரளா மீனாட்சிபுரம் போலீசார் இணைந்து சனிக்கிழமை மாலை திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில், சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் பரிசோதனை செய்யப்பட்டு அதற்குப் பிறகு அனுப்பப்படுகிறது.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம், கொள்ளையர்கள் நடமாட்டம், ஏதாவது கடத்தல் நடைபெறுகிறதா? மதுபானங்கள் கடத்தப்படுகிறதா? போன்றவற்றை போலீசார் பரிசோதித்து வருகின்றனர்.
ஆனைமலை காவல் உதவி ஆய்வாளர் முருகநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் மைக்கேல் சகாயராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீஸாரும், கேரள மீனாட்சிபுரம் காவல் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசாரும் என இரு மாநில போலீசார் 20க்கும் மேற்பட்டோர் இணைந்து சோதனை செய்வதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரு மாநில போலீசார் இணைந்து வாகன சோதனை மீனாட்சிபுரம் பகுதியில் பரபரப்பு
Reviewed by Cheran Express
on
July 20, 2024
Rating: 5
No comments