Breaking News

மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


 மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு மின்சார கட்டண உயர்வை திரும்பி பெற வேண்டும். மாதாந்திர மின் கணக்கீட்டை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தாலுகா கமிட்டி சார்பில்  திருவள்ளூர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திரளானோர் கலந்து கொண்டனர்.

 நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு குழு உறுப்பினர் வி.பாலகுருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி, தாலுகா செயலாளர் எம்.அன்பரசன் தாலுகா குழு உறுப்பினர்கள் கே. மகாலிங்கம், ஏ.துரைசாமி, அங்கமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

 ஆர்ப்பாட்டத்தில் 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் நகர கிளை செயலாளர் ஸ்டாலின் பழனிசாமி நன்றி கூறினார்.

No comments