Breaking News

சங்கவி வித்யா மந்திர் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

சங்கவி வித்யா மந்திர் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு 
பொள்ளாச்சி அடுத்த ஏரிப்பட்டியில் செயல்பட்டு வரும் சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வியுடன் பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

 பள்ளி தாளாளர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார்.

 பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 உடன் மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், இயற்கை நேசி பொதுநல அறக்கட்டளை நிர்வாகி கமலக்கண்ணன் உட்பட பல பங்கேற்றனர்.

No comments