Breaking News

ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்

ஆனைமலையாறு மற்றும் நல்லாறுத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்

 மத்திய அமைச்சரிடம் கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மனு 
பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ள  ஆனைமலையாறு மற்றும் நல்லாறுத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  

இந்நிலையில் ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளிடமிருந்து கொப்பரையை வாங்கி தேங்காய் எண்ணெயாக மாற்றி அதை பாரத் தேங்காய் எண்ணெயாக ரேசன் கடைகளில் விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம், கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் வசந்த ராஜன் வழங்கினார். 

உடன் மாவட்ட பார்வையாளர் மோகன் மந்தராச்சலம், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் துரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் இருந்தனர்.

No comments