சாலை விபத்தில் நீதிபதி உயிரிழப்பு
சாலை விபத்தில் நீதிபதி உயிரிழப்பு
பொள்ளாச்சி, ஜூலை.16-
பொள்ளாச்சியில் சாலையை கடக்கும்போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி நீதிபதி உயிரிழந்தார்.
பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையம் ராம்ஸ் நகரைச்சேர்ந்தவர் கருணாநிதி(58), இவர் ஊட்டியில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்துவந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 2.15 மணியளவில் சின்னாம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து உடுமலை சாலையில் உள்ள கெளரிகிருஷ்ணா உணவகத்திற்கு காரில் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, உணவகத்திற்கு எதிரே காரை நிறுத்திவிட்டு சாலை கடந்துள்ளார். அப்போது ,உடுமலை சாலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச்சென்ற அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் நீதிபதி கருணாநிதி பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நீதிபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டனர்.
பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்தும் சம்பவ இடத்திலும் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
சாலை விபத்தில் நீதிபதி உயிரிழப்பு
Reviewed by Cheran Express
on
July 16, 2024
Rating: 5
No comments