சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா
சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா
பொள்ளாச்சி, ஜூலை.16-
பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
என்ஜிஎம் கல்லூரித்தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார்.
பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்தின் நறிவிலி எனும் கவிதைத் தொகுப்பும், மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் கவிதைகளின் மொழிபெயர்ப்பான உழவனின் பாடல் நூல்களை பாண்டிச்சேரி திறனாய்வாளர் க.பஞ்சாங்கம் வெளியிட, முனைவர் திருப்பத்தூர் அரசு கல்லூரி தமிழ்துறைத்தலைவர் கி.பார்த்திபராஜா பெற்றுக்கொண்டார்.
2023ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருதுகள் கவிஞர் திரைப்பட இயக்குநர் பிருந்தாசாரதி மற்றும் சென்னை கவிஞர் கோ.வசந்தகுமாரன் ஆகியோருக்கு சிறந்த கவிதை படைப்புக்களுக்காக பகிர்ந்து வழங்கப்பட்டது.
2024ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருதுகள் ஓவியக் கவிஞர் சென்னை அமுதபாரதி மற்றும் சென்னை கவிஞர் நா.வே.அருள் ஆகியோருக்கும் சிறந்த கவிஞர்கள் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது.
2024ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கியப் பரிசு கவிஞர் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் புன்னகை பூ.ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்டது.
பதிப்பியல் வித்தகர் எனும் விருது மணிவாசகர் பதிப்பகத்தைச் சார்ந்த இராம.குருமூர்த்திக்கு வழங்கப்பட்டது.
விருதாளர்கள் குறித்த அறிமுக உரையை பொள்ளாச்சி இலக்கிய வட்ட கவிஞர் க.அம்சப்ரியாவும், கவிஞர் இரா.பூபாலனும் பேசினர்.
திருச்சியை சேர்ந்த கவிஞர் நந்தலாலா விருதுபெற்றவர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். கிருங்கை சேதுபதி நன்றி கூறினார்.
என்ஜிஎம் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் வடிவேல் மற்றும் பாண்டிச்சேரி பேராசிரியர் சேதுபதி நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா
Reviewed by Cheran Express
on
July 16, 2024
Rating: 5
No comments