நீதிபதி மீது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியவர் கைது
நீதிபதி மீது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியவர் கைது
பொள்ளாச்சி, ஜூலை.17-
நீதிபதி சாலையை நடந்து சென்று கடக்கும்போது இருசக்கர வாகனத்தில் சென்று மோதி விபத்தை ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையம் ராம்ஸ் நகரைச்சேர்ந்தவர் கருணாநிதி(58), இவர் ஊட்டியில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்துவந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 2.15 மணியளவில் சின்னாம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து உடுமலை சாலையில் உள்ள கெளரிகிருஷ்ணா உணவகத்திற்கு காரில் சென்றதாக கூறப்படுகிறது. உணவகத்திற்கு எதிரே காரை நிறுத்திவிட்டு சாலை கடந்துள்ளார்.
அப்போது ,உடுமலை சாலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச்சென்ற அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் நீதிபதி கருணாநிதி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தில் சென்றநபர் நிற்காமல் தப்பிச்சென்று தலைமறைவானார்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்திய கிழக்குகாவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்திவந்தனர்.
சிசிடிவி காட்சி அடிப்படையில் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியவர் பொள்ளாச்சி அடுத்த கே.நாகூர் பகுதியைச்சேர்ந்த வஞ்சிமுத்து(28) என்பதும், பயத்தின் காரணமாக தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதையடுத்து, வஞ்சிமுத்துவை போலீஸார் கைது செய்தனர்.
No comments