அரசு பள்ளியில் அமைச்சர் ஆய்வு
அரசு பள்ளியில் அமைச்சர் ஆய்வு
பொள்ளாச்சி, ஜூலை.16-
பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலையாண்டிப்பட்டணத்தில் மனோன்மணி செல்லமுத்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 600 மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 1961ம் ஆண்டு காமராஜரால் இந்த பள்ளி திறக்கப்பட்டது.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 234 சட்டபேரவை தொகுதியில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதில் 139 வது தொகுதியாக பள்ளி பார்வை திட்டத்தின் கீழ், வால்பாறை சட்டப்பேரவை தொகுதியில் அமைந்துள்ள இப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சிவக்குமாரிடம் பள்ளியில் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை .உள்ளிட்ட தகவல்களை கேட்டறிந்தார். வகுப்பறைகளில் சென்று மாணவிகளுடன் கலந்துரையாடி பள்ளி ஆய்வகத்தை பார்வையிட்டார்.
மாணவிகளிடம் பேசும்போது, ‘ அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும். பிளஸ் 2 முடித்தவுடன் வீட்டில் இருந்து விட கூடாது, உயர்கல்வியான கல்லூரி படிப்பை பயில வேண்டும் என கேட்டு கொண்டார். தொடர்ச்சியாக கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு பள்ளியில் அமைச்சர் ஆய்வு
Reviewed by Cheran Express
on
July 16, 2024
Rating: 5
No comments