போலீசாரை தாக்கிய அரசு ஊழியர்கள் கைது
போலீசாரை தாக்கிய அரசு ஊழியர்கள் கைது
பொள்ளாச்சி, ஜூலை.12-
தலைமை காவலரை தாக்கிய அரசு ஊழியர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கோட்டூர் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றுபவர் ஞானசுந்தரம். இவர் கடந்த 10ம் தேதி தென்சங்கம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கிருந்த திருமண மண்டபம் முன்பு போக்குவரத்துக்கு இடையூராக சிலர் பட்டாசு வெடித்துள்ளனர்.
இதைப்பார்த்த தலைமைக்காவலர் போக்குவரத்துக்கு இடையூரு செய்யவேண்டாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் பட்டாசு வெடித்த ரமணமுதலிபுதூரைச்சேர்ந்த அருண்பிரசாத்(29), செந்தமிழ்ச்செல்வன்(25) ஆகியோருக்கும் தலைமைக்காவலருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது, அருண்பிரசாத் மற்றும் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமைக்காவலரை தகாத வார்த்தையால் திட்டி, பணிசெய்யவிடாமல் தடுத்ததுடன், கழுத்தை நெரித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, அருகில் இருந்தவர்கள் காவலரை காப்பாற்றியுள்ளனர்.
தலைமைக்காவலர் ஞானசுந்தரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீஸார் வியாழக்கிழமை இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரெக்கார்டு கிளர்க்காக பணியாற்றிவருகின்றனர்.
No comments