Breaking News

காண்டூர் கால்வாய் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா ?

காண்டூர் கால்வாய் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா ?

 சர்க்கார்பதியிலிருந்து திருமூர்த்தி மலை செல்லும் காண்டூர் கால்வாய் அருகே ஒன்பதாவது கிலோமீட்டர் பகுதியில் பழைய பொதுப்பணித்துறை கட்டிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

 இந்த கட்டிடத்தின் அருகே பொதுப்பணித்துறை இடம் தனியாரால் வேலி அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இது உண்மையா என்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள் எழுந்தது.

காண்டூர் கால்வாய் துவங்கும் இடத்திலிருந்து சுமார் ஒன்பதாவது கிலோ மீட்டர் தொலைவிற்கு அருகே இந்த ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 சமீபத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

 ஆனால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அளவீடு செய்து பார்க்கவில்லை.

 ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் தனிநபர் இடத்தில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் சிலர் அடிக்கடி சென்று தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

 இதுபோன்று கால்வாய் அருகே ஆக்கிரமிப்புகள் இருப்பதாக புகார் எழும் இடங்களில் அதிகாரிகள் மற்றும் பாசன சபை தலைவர்கள், பகிர்மான குழு தலைவர்கள், திட்டக் குழு தலைவர்கள்  ஆய்வு செய்து விட்டு ஆக்கிரமிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தால் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு உள்ளதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படும் தனிநபர் இடத்தில் தொடர்பில் உள்ள ஊழியர்கள் பெயர்களை பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அவர்களது பணி பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெயர் வெளியிடப்படவில்லை.

No comments