நெகமம் அருகே ஆட்டோ ஓட்டுனர் வெட்டிக்கொலை
நெகமம் அருகே ஆட்டோ ஓட்டுனர் வெட்டிக்கொலை
நெகமம் அடுத்த செட்டிபாளையம்- வட சித்தூர் சாலையில் பணப்பட்டி பிரிவு அருகே ஆளில்லாத இடத்தில் சரக்கு ஆட்டோ ஒன்று சந்தேகத்திற்கு இடமாக நின்றுள்ளது.
அருகில் இருந்த பொதுமக்கள் ஆட்டோ உள்ளே பார்த்தபோது ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, நெகமம் போலீசாருக்கு பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சென்று பார்த்த போது ஆட்டோவில் ஒருவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் கோவை சுந்தராபுரம் சிட்கோ பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (32) என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் வெள்ளிக்கிழமை காலை வாடகைக்காக இந்தப் பகுதியில் வந்த போது கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments