Breaking News

இந்திய மருத்துவ சங்கம் சார்பாக முதலுதவி சிகிச்சை விளக்க கூட்டம்


இந்திய மருத்துவ சங்கம் சார்பாக முதலுதவி சிகிச்சை விளக்க கூட்டம்

இந்திய மருத்துவ சங்க பொள்ளாச்சி கிளை சார்பாக முதலுதவி சிகிச்சை விளக்கம் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

 இந்திய மருத்துவ சங்கத்தின் பொள்ளாச்சி கிளைத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் செளந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் சரவணன், அனில் கெளதம், சீனிவாசன், புவனேஷ்வரி ஆகியோர் பங்கேற்று பேசினர். 

மருத்துவர் அனில் கெளதம் அடிப்படை முதலுதவி குறித்து விளக்கி பேசியதுடன், செயல் முறையிலும் விளக்கமளித்தார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதே முதலுதவி சிகிச்சை விளக்க கூட்டத்தை காஞ்சிபுரத்தில் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

 தமிழகம் முழுவதும் 150க்கும் அதிகமான இந்திய மருத்துவ சங்க கிளைகளில் முதலுதவி சிகிச்சை விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் போலீஸார், செவிலியர்கள், பொதுமக்கள் என 100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
---

No comments