மான் வேட்டையாடியவர்கள் கைது
மான் வேட்டையாடியவர்கள் கைது
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சிலர் வன உயிரினங்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து, உடுமலை வனச்சரக அலுவலர் மணிகண்டன், அமராவதி வனச்சரக அலுவலர் புகழேந்தி தலைமையிலான வனத்துறையினர் வருவாய் துறைக்கு சொந்தமான ஜம்புக்கல் கரடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஐந்து பேரிடம் சோதனை நடத்தினர். அவர்களிடம் 4.6 கிலோ மான் இறைச்சி இருப்பது தெரிய வந்தது.
இதை அடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மானை கண்ணி வைத்து வேட்டையாடியது தெரியவந்தது. இதை அடுத்து மலையாண்டி கவுண்டனூரை சேர்ந்த பிரபு (24) பெருமாள் புதூரை சேர்ந்த சதீஷ் (27) மலையாண்டி கவுண்டனூரை சேர்ந்த பரதராமன் (43), எலையமுத்தூரைச் சேர்ந்த மாணிக்கம் (24) வசந்தகுமார் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.
No comments