Breaking News

மோப்பநாய் உதவியுடன் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு


மோப்பநாய் உதவியுடன் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு 

பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் ஆழியாறு பகுதியில் வனத்துறை சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்த வழியே செல்லும் வாகனங்களை வனத்துறையினர் பல்வேறு பாதுகாப்புகளுக்காக சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தற்போது தமிழக அரசின் உத்தரவுப்படி போதைப் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.

 இந்நிலையில், வியாழக்கிழமை ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் பைரவா என்ற மோப்பநாய் உதவியுடன் வாகனங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

வனச்சரக அலுவலர் பாலமுருகன் தலைமையில் வனத்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகள் வெளியிட தொடர்புக்கு 8667880207

No comments