குரங்கு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்
குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்
கோவை மாவட்டம் ஆழியாறு அணை அருகே குரங்கு அருவி அமைந்துள்ளது.
இந்த அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. குரங்கு அருவிக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டினரும் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், வறட்சியின் காரணமாக கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி குரங்கு அருவி மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
அதற்குப் பிறகு தற்போது மழை பெய்து தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் புதன்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகளை குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
வனச்சரக அலுவலர் பாலமுருகன் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
No comments