Breaking News

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நகராட்சித்தலைவர்


விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நகராட்சித்தலைவர்

 பொள்ளாச்சி-கோவை சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார் பொள்ளாச்சி நகராட்சித்தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்.
 பொள்ளாச்சி தாமரைகுளத்தை சேர்ந்தவர் கனகவேல்,  தனது இரு  மகன்களுடன் தனது இருசக்கர வாகனத்தில்     கோவில்பாளையம்  அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலை தடுப்பில் எதிர்பார விதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில் தரணீஸ், தரணீந்திரன்  ஆகியோர் காயமடைந்தனர். கோவை சென்று விட்டு கோவில்பாளையம் வழியாக பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளாநவநீதகிருஷ்ணன் வந்துள்ளார். விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை பார்த்தவுடன் தனது காரை நிறுத்தி அதில் அவர்களை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக சேர்த்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு நன்றாக சிகிச்சையளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.


  

No comments