Breaking News

புலிகள் காப்பகத்தை ஒட்டி அனுமதியில்லாமல் தனியார் சொகுசு விடுதிகள் நடவடிக்கை எடுக்குமா வனத்துறை மற்றும் காவல்துறை

புலிகள் காப்பகத்தை ஒட்டி அனுமதியில்லாமல் தனியார் சொகுசு விடுதிகள்

நடவடிக்கை எடுக்குமா வனத்துறை மற்றும் காவல்துறை
ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அனுமதி இல்லாமல் செயல்படும் தனியார் தங்கும் விடுதிகள் மீது வனத்துறை மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, திருப்பூர் என இரண்டு கோட்டங்களாகவும் ஆறு வனச்சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டு மாடு, ராஜநாகம் பல்வேறு வகையான மான்கள் பல்லுயிரிகளின் வாழ்விடமாக உள்ளது.

வனப்பகுதியை ஒட்டி வன உயிரினங்களின் வழித்தடங்களில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருப்பதாக புகார்கள் உள்ளது.

 குறிப்பாக யானை உள்ளிட்ட பேருயிர்கள் இடம் பெயர வழி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது புலிகள் காப்பகத்தை ஒட்டி மிக அருகிலேயே அனுமதியில்லாமல் ரிசார்ட்டுகள் எனப்படும் தனியார் தங்கும் விடுதிகள் அதிகரித்துள்ளது.

 முறையான எந்தவித அனுமதியும் இன்றி கட்டிடங்களை கட்டி உள்ளனர். இந்த தங்கும் விடுதிகளுக்கு வரும் நபர்கள் பல்வேறு வகையான விலை உயர்ந்த வாகனங்களில் வந்து ஒலி எழுப்புவதால்  வன உயிரினங்களுக்கு பெரிய இடையூறு ஏற்படுகிறது.

 மேலும் தங்கும் விடுதிகளுக்கு வருபவர்கள் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை வன எல்லையில் போட்டு விடுகின்றனர் என்பது குற்றச்சாட்டாக உள்ளது.

அனுமதி இல்லாமல் செயல்படும் தனியார் தங்கும் விடுதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளது.

இதுபோன்று அனுமதி இல்லாமல் செயல்படும் தங்கும் விடுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்க வாய்ப்பில்லை. ஏதாவது, குற்றச்சம்பவங்கள் நடந்து விட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது.

 ஆகவே அனுமதியில்லாமல் செயல்படும் தங்கும் விடுதிகளை போலீசாரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 வனத்துறையினர் தினசரி ரோந்து செல்லும் பகுதிகளிலேயே அனுமதியில்லாமல் தங்கும் விடுதிகள் இருந்தும் வனத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சேத்துமடை பகுதியில் அனுமதியில்லாமல் செயல்பட்ட தங்கும் விடுதியில் போதை மருந்துகள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு அப்போது இருந்த எஸ்.பி., பலரை கைது செய்ததுடன் அந்த தங்கும் விடுதி மீது நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments