மழையில் நனைந்து கொண்டு கல்வி பயிலும் மாணவர்கள் பொள்ளாச்சி அருகே அவலம்
மழையில் நனைந்து கொண்டு கல்வி பயிலும் மாணவர்கள்
பொள்ளாச்சி அருகே அவலம்
பொள்ளாச்சி அருகே நல்லூர் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் மலையில் நனைந்தபடி கல்வி பயிலும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த நல்லூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 29 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
ஓட்டு கூரையில் இயங்கி வரும் அரசு பள்ளி முறையான பராமரிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு 100 குழந்தைகள் படித்த இந்தப் பள்ளியில் தற்போது 29 குழந்தைகள் மட்டுமே படித்து வருகின்றனர்.
போதுமான அடிப்படை வசதிகள் பள்ளியில் இல்லாததே இதற்கு காரணம் என்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது பெய்து வரும் பருவ மழைக்கு பள்ளி முழுவதும் மழை நீர் கசிந்து வகுப்பறைக்குள் மாணவர்கள் மழையில் நனைந்தபடி கல்வி பயின்று வருவதாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில செவ்வாய்க்கிழமை பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
No comments