நிரம்பும் நிலையில் சோலையார் ஆழியாறு அணைகள்
நிரம்பும் நிலையில் சோலையார் ஆழியாறு அணைகள்
பி ஏ பி திட்டத்தில் உள்ள தொகுப்பு அணை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சோலையார் மற்றும் ஆழியாறு அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது.
பரம்பிக்குளம்- ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையார், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, மேல் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் உள்ளன.
கடந்த ஆண்டு பிஏபி திட்ட தொகுப்பு அணை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்த அளவு பெய்ததால் அணைகள் நிரம்ப வில்லை.
இதனால், விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த ஆண்டு கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பிஏபி திட்ட தொகுப்பு அணை பகுதிகளில் தீவிரமடைந்துள்ளதால் அணைகளுக்கு நல்ல நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
160 அடி உயரம் உள்ள சோலையார் அணை இன்று மாலை 5 மணி நிலவரப்படி 155 அடியை எட்டியது.
5000 கன அடிக்கு மேல் நீர் வரத்து உள்ளது.
ஆழியாறு அணை மொத்தமுள்ள 120 அடி உயரத்தில் 103 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. 3500 கன அடி நீர்வரத்து உள்ளது.
இந்த இரண்டு அணைகளும் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் நிரம்பி விடும் வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த இரண்டு அணை பகுதிகளில் மற்றும் அதன் நீர் செல்லும் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட உள்ளது.
No comments