Breaking News

தமிழகம் கொலை மாநிலமாக மாறியுள்ளது எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

தமிழகம் கொலை மாநிலமாக மாறியுள்ளது 

எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு


தமிழகம் கொலை மாநிலமாக மாறியுள்ளதாக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதி பொள்ளாச்சி நகரத்தில் 19வது வார்டு ஜூப்ளிகிணறு வீதியில் உள்ள நியாய விலை கடை விரிவாக்க பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

 எம்.எல்.ஏ., பொள்ளாச்சி வி. ஜெயராமன், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பூமி பூஜையை துவக்கி வைத்தனர்.

செய்தியாளர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியது...

 தமிழகத்தில் பாஜக நிர்வாகி, அதிமுக நிர்வாகி என பல்வேறு கொலைகள் நடைபெற்று வருகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது.

 கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு சிறிது சறுக்கல் ஏற்பட்டிருந்தாலும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று எடப்பாடி யார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார்.

மாவட்ட மாணவரனி செயலாளர் ஜேம்ஸ்ராஜா வரவேற்புரையாற்றினார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார்
கழக பொதுக்குழு உறுப்பினர் K.P. சுப்பிரமணியம், 
மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் PRK. குருசாமி,
 மாவட்ட பிரதிநிதிகள் அருணாச்சலம், இரும்புகுரு, நகர கழக பொருளாளர் கனகு,
நகர அம்மா பேரவை செயலாளர் சுந்தரம், PVJ. அக்னீஷ் முகுந்தன், பிரவீன் ஜெயராமன்,  நீலகண்டன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காளிமுத்து, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் S.K.C.செந்தில், மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர்  மணிவண்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் மார்ட்டீன், நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் தினேஷ், நகர பாசறை செயலாளர் சத்தியவர்த்தி,
வார்டு கழக நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, ராஜ், துரை, மாறன், முருகவேல், ராதா, பிரபு, பாலு, ஐயப்பன், அண்ணாதுரை, சுபீர், நாதர் கான், கிட்டான், சண்முகசுந்தரம்,சுப்பிரமணியம், முரளி, முருகன், செல்வத்துரை, மாரிமுத்து, செந்தில், கிருஷ்ணன் குட்டி, அருண்குமார், சூர்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments