மழையினால் சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடு வேண்டும் பொள்ளாச்சி நகர பாஜக சார்பில் மனு
மழையினால் சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடு வேண்டும்
பொள்ளாச்சி அடுத்த ஜமீன் ஊத்துக்குளி காந்திநகர் மூன்றாவது வார்டில் மழையினால் சேதம் அடைந்த வீடுகளுக்கு தமிழக அரசு புதிய வீடு கட்டி தர வேண்டி நகர பாஜக மற்றும் பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை மனு அளித்தனர்.
ஜமீன் ஊத்துக்குளி காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பொது மக்களின் 6 வீடுகள் மழையினால் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. இந்த வீடுகளில் வசித்த பொதுமக்களை அரசு அலுவலகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 40 வீடுகள் விரிசல் விழுந்து சேதம் அடைந்துள்ளதாக தெரிகிறது. கழிப்பிட வசதிகளும் இல்லை என்று கூறப்படுகிறது.
எனவே சேதமடைந்த 46 வீடுகளுக்கு பதிலாக தமிழக அரசு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என பாஜக சார்பில் தலைவர் பரமகுரு தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
No comments