Breaking News

ஆழியார் அணையில் இருந்து 6000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

ஆழியார் அணையில் இருந்து 6000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
பி ஏ பி திட்டத்தில் முக்கிய அணைகளில் ஒன்றான ஆழியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் திங்கள்கிழமை நல்ல மழை பெய்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

 திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு மதகுகள் வழியாக 1450 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இரவு மழை பொழிவு அதிகரித்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது படிப்படியாக தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டது.

 அதிகாலை 3 மணி நிலவரப்படி அணையிலிருந்து 6000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. ஆழியாறு கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

No comments