முள்ளம்பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது
முள்ளம்பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது
பொள்ளாச்சி அருகே முள்ளம்பன்றியை வேட்டையாடிய 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அடுத்த கெங்கலப்பம்பாளையம் பகுதியில் சிலர் முள்ளம்பன்றியை வேட்டையாடியதாக வனச்சரக அலுவலர் ஞானபாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி கெங்கலப்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவரது தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு முள்ளம்பன்றி இரைச்சியை சமைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயப்பிரகாஷ், தெய்வராஜ், ரங்கசாமி, லோகேஷ், தீபன், மோகன்ராஜ் ஆகிய 6 பேரையும் முள்ளம்பன்றியை வேட்டையாடியதற்காக கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கெங்கலப்பாளையம் பகுதியிலுள்ள ஆற்றுப்படுகையில் முள்ளம்பன்றியை பிடித்ததாக தெரிவித்தனர்.
No comments