வால்பாறையில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு
வால்பாறையில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு
வால்பாறை காமராஜ் நகர் பகுதியில் சிறுத்தை குட்டி ஒன்று உயிரிழந்த கிடப்பதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து, வன கால்நடை மருத்துவர் விஜயராகவன், வால்பாறை கால்நடை உதவி மருத்துவர் அலுவலர் செந்தில்நாதன், வனச்சரக அலுவலர் வெங்கடேஷ், வனவர் கணேசன், என்.சி.எப் நிர்வாகி கணேஷ் ரகுநாத் ஆகியோர் சம்பவ இடத்தில் சிறுத்தை குட்டியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சிறுத்தை குட்டி ஏறியூட்டப்பட்டது.
உயிரிழந்த சிறுத்தை குட்டி சுமார் 4 மாதம் வயதுடையது என்பதும், ஆண் சிறுத்தை குட்டி என்பதும் தெரிய வந்தது.
No comments