Breaking News

எம் எல் ஏ அமுல் கந்தசாமி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பிரச்சாரம்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி ஒடையகுளம் கோட்டூர் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். 

அப்போது, அவர் பேசு கையில்., திமுக எப்போதுமே பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி வெற்றி பெறும்.

 அதே போல் இந்த தேர்தலிலும் பல பொய்யான வாக்குறுதிகளை கூறி வருகிறது. திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை கேட்டு மக்கள் ஏமாற வேண்டாம். 

ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை அதிமுகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும்.

 ஏனென்றால், நீண்ட காலமாக  கிடப்பில் கிடந்த திட்டத்தை அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேரள முதல்வரை சந்தித்து பேச்சு நடத்தி சமூக உடன்பாடு எட்ட செய்தார். 

இரண்டு மாநில அரசுகளும் சேர்ந்து திட்டத்தை நிறைவேற்ற உயர்மட்ட குழு அமைத்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த உயர்மட்ட குழு முறையாக செயல்படுவதில்லை. ஆகவே மக்கள் சிந்தித்து அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்றார். உடன் முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரிவாசு, அதிமுக நிர்வாகிகள் சுந்தரம், விமல் உட்பட பலர் இருந்தனர்.

1 comment: