Breaking News

வி ஆர் டி அரசு பள்ளிக்கு கணினி மேஜைகள் வழங்கல்

வி ஆர் டி அரசு பள்ளிக்கு கணினி மேஜைகள் வழங்கல்
ஆனைமலை வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆனைமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக் சண்முகசுந்தரம்  நினைவாக கணினி ஆய்வகத்திற்கும், பள்ளி அலுவலகத்திற்கும் கணினி மேசைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
 இந்நிகழ்வில், பள்ளியின் தலைமையாசிரியர் 
சுமதி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில், அசோக் சண்முகசுந்தரம் மனைவி ராதா சண்முகசுந்தரம் மற்றும் அவரது தங்கை சந்திர பிரபா ஆகியோரும் ,மேலும் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், சிங்காரம் சீனிவாசன், மணிகண்டன், மாணிக்கவேல் போன்றோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவித் தலைமை ஆசிரியர்  விமலாதேவி, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கணினி ஆசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

No comments