அதிமுக மக்கள் நலனுக்கான கட்சி.. திமுக குடும்ப நலனுக்கான கட்சி..
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து எம்எல்ஏ அமுல் கந்தசாமி இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில்.... அதிமுக மட்டுமே மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சி. மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்தும் கட்சியாக உள்ளது.
ஆனால், திமுக ஒரு குடும்ப நலனுக்காக செயல்படும் கட்சி. மக்கள் நலனில் அக்கறை இல்லாத கட்சி.
ஆகவே இந்த முறை வாக்களிக்கும் போது மக்கள் இதை மனதில் வைத்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார். உடன் முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, அதிமுக நிர்வாகி சுந்தரம், மாவட்ட கவுன்சிலர் உட்பட பலர் இருந்தனர்.
No comments