Breaking News

ஆதரவு விலை கேட்ட விவசாயிகளுக்கு ஆணி படுக்கை வரவேற்பு அளித்தது பாஜக அரசு


ஆதரவு விலை கேட்ட விவசாயிகளுக்கு ஆணி படுக்கை வரவேற்பளித்த கட்சி பாஜக
மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்காசன் குற்றச்சாட்டு

பொள்ளாச்சி
விவசாய விலை பொருட்களுக்கு ஆதரவு விலை கேட்டு டெல்லி சென்ற விவசாயிகளுக்கு ஆணி படுக்கை வரவேற்பு அளித்த கட்சி பாஜக என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து திங்கள்கிழமை இரவு பொள்ளாச்சி பேருந்துநிலையம் பகுதியில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது....

60 வருடங்களாக பொள்ளாச்சிக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தென்னை விவசாயம் சார்ந்த பகுதியாக பொள்ளாச்சி உள்ளது. 

விவசாயிகளுக்கு நல வாரியம் அமைத்தது, உழவர் சந்தை அமைத்தது , விவசாயிகளுக்கு 7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தவர் கலைஞர்.

 இலவச மின்சாரம், விவசாயத்திற்கு தனி பட்ஜெட், 2 லட்சம் மின் இணைப்பு போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இப்படி விவசாயிகளுக்காக செய்வதுதான் திராவிட மாடல். ஆகவே யாரும் திராவிட மாடலை கிண்டலாக பேசக்கூடாது. 

பத்து ஆண்டில் மத்திய அரசு விவசாயத்திற்காக என்ன செய்தது? விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு டெல்லிக்கு சென்ற விவசாயிகளை ஆணி படுக்கை கொண்டு வரவேற்பு அளித்தது தான் மத்திய பாஜக அரசு.

 ஆகவே, எந்த அரசு வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நல்லதை நினைத்து வாக்களியுங்கள் உதயசூரியனுக்கு. நாளை நமது ஆக வேண்டும் என்று நினைத்து வாக்களியுங்கள் என்றார். 

உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

 மாலை 5 மணிக்கு கமல்காசன் பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரவு 8 மணிக்குத்தான் கமல்காசன் வந்தார். இதனால், மாலையில் இருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பலர் காத்திருந்த நிலையில் நான்கு நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டுச்சென்றார். 

No comments